நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இதனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கிறது இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.20க்கும், டீசல் விலை ரூ.98.67க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 107.83க்கும் டீசல் ரூ.97.45க்கும் விற்கப்படுகிறது. கொரோனாவுக்கு மத்தியில் இந்த விலையேற்றம் மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.