Categories
பல்சுவை

உங்கள் ஆதாரில் எதாவது பிரச்சினையா…? இந்த எண்ணுக்கு அழைத்தால் போதும்…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய செல்போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

உங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் ஆதாரில் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்க முடியாது. தற்போதுஆதாரில் மொபைல் நம்பரை இணைப்பதே பெரும் பிரச்சினையாக பலருக்கு இருக்கிறது. அதில் பெயர், முகவரி மாற்றம் போன்ற பல விஷயங்களுக்கும் டோல் பிரீ நம்பர் இருப்பது என்பது பலருக்கும் தெரிவதில்லை. உங்களுடைய ஆதார் தொடர்பான பிரச்சினைக்கு 1947 என்ற நம்பருக்கு அழைப்பதன் மூலம் தீர்வு காண முடியும்.

ஆதாரை ஜன் தன் கணக்கில் இணைப்பது, ஆதார் – பான் இணைப்பு, மொபைல் நம்பர் இல்லாமல் பான் கார்டு அப்டேட் செய்வது, ஆதார் அப்டேட்டுக்கு கட்டணம் எவ்வளவு போன்ற பல கேள்விகள் வாடிக்கையாளர்களிடம் இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஆதார் டோல் ஃபிரீ எண் உதவும்.

Categories

Tech |