காட்பாடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி வஞ்சூரை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு, மறுநாள் வந்து பார்த்தபோது அது திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அவர் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடியது கழிஞ்சூரை சேர்ந்த மதன்குமார் மற்றும் 18 வயதுடைய வாலிபர் என்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்ததோடு, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.