Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவில் பார்க்க சென்ற வழக்கறிஞர்… குடும்பத்தினரின் கொடூர செயல்…. சென்னையில் பரபரப்பு…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் குடும்பத்தினர் வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து விவாகரத்து பெறுவதற்காக சத்யா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவருக்கும் சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ள காதலாக மாறிவிட்டது. அதன்பிறகு இருவரும் தனியாக வாடகைக்கு ஒரு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் வழக்கம்போல வழக்கறிஞர் வெங்கடேஷ் சத்யாவை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சத்யாவின் தந்தை சங்கர், தாய் சென்னம்மாள், கணவர் வெங்கடேஷ் அவருடைய சகோதரி, சகோதரன் மற்றும் சில உறவினர்கள் நள்ளிரவு 12 மணியளவில் அங்கு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து சத்யாவும், வெங்கடேஷும் ஒரே வீட்டில் தனியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வழக்கறிஞரை சரமாரியாக தாக்கியதோடு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை வெட்டியுள்ளனர். மேலும் அதனை தடுக்க முயன்ற சத்யாவையும் அவர்கள் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதன்பின் சத்யாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வழக்கறிஞர் வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் சத்யாவை மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழக்கறிஞரை கொலை செய்த குற்றத்திற்காக சத்யாவின் குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |