Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கதவை உடைத்து பார்த்த போது…. அலறி துடிதுடித்த குடும்பத்தினர்…. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் அப்துல் ரஷீத் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு நஷீத் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி திடீரென இவர்களது வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன்,மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேர் மீதும் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனை அடுத்து தீயணைப்புத்துறையினர் தீயில் எரிந்து படுகாயமடைந்த அப்துல் ரஹீம், அவரது மனைவி மற்றும் மகனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாத்திமாவும், அவரது மகன் நஹீத்தும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் அப்துல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

Categories

Tech |