Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை… மூதாட்டியின் செயலால்… சேலத்தில் பரபரப்பு…!!

மனு கொடுப்பதற்காக சென்ற மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு பையை தனது கையில் வைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அந்த மூதாட்டியின் பையை சோதனை செய்தபோது அதில் மண்ணெண்ணெய் பாட்டில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில் அவர் தாதகாப்பட்டியில் வசிக்கும் ஸ்ரீ ரங்கம்மாள் என்பது தெரியவந்துள்ளது.அதன்பிறகு அந்த மூதாட்டி காவல்துறையினரிடம் தனக்கு திருமணமாகிய மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மகன்கள் என் பெயரில் இருந்த நிலம் மற்றும் வீட்டை தந்திரமாக வாங்கிக் கொண்டனர். அதன்பிறகு அவர்கள் என்னை கவனிக்கமாலும், தனக்கு சாப்பாடும் கொடுக்காமல் இருந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் நான் சில நாட்கள் பட்டினியாக இருந்திருக்கிறேன் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதனால் தான் கலெக்டரிடம் என்னுடைய வீடு மற்றும் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று மனு கொடுப்பதற்காக சென்றேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மூதாட்டி வைத்திருந்த மண்ணெண்யை வாங்கிக் கொண்டு அவரை கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |