வாகனங்களை வாங்குவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி ஆட்டோ மொபைல் துறையை மீட்டெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்களிடையே நிலவி வருகிறது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையானது கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்தது. இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பயன்படுத்தி வந்த பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும்,
இதன்மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சரிந்து கிடந்த ஆட்டோமொபைல் துறையை ஊக்க படுத்துவதற்கான ஒரு சிறு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. மேலும் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் வாகனங்களை வாங்குவதற்கு முன் வர வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்கள் அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். அதன்படி,
ஆட்டோமொபைல் துறையை காப்பாற்ற மத்திய அரசு செய்த முயற்சியானது பெரிய வைக்கோலில் குண்டு ஊசியை போட்டு தேடுவது போல் உள்ளது என்று விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் இந்த முயற்சி ஆட்டோ மொபைல் துறையை காப்பற்ற எடுக்கப்படும் முதல் முயற்சி தான் என்று தெரிவித்த போதிலும் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசு சார்பில் வாங்கப்படும் வாகனங்கள் மக்கள் வரிபணத்தில் வாங்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.