Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. 1 பாட்டில் விஸ்கி 1 கோடி ரூபாய்.. 250 வருடங்களுக்கு முன் தயாரித்தது..!!

உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த 250 வருடங்களுக்கு முந்தைய ஒரு பாட்டில் விஸ்கி ஒரு கோடி ரூபாயை தாண்டி ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்க்லெட் என்ற இந்த விஸ்கியை கடந்த 1860 ஆம் வருடத்தில் பாட்டிலில் அடைத்துள்ளனர். எனினும், பாட்டிலில் அடைப்பதற்கு சுமார் ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே இதனை தயாரித்துள்ளனர். இவ்வளவு பழமையானது என்பதால் உலகிலேயே மிக அதிகமான விலைக்கு விற்பனையாகியுள்ளது.

இந்த விஸ்கி, சமீபத்தில் மிட்டவுன் மன்ஹாட்டனில் இருக்கும் அருங்காட்சியகம், தி மோர்கன் என்ற நூலகத்திற்கு 1,37,500 அமெரிக்க டாலர்களுக்கு கடந்த மாதம் 30 ஆம் தேதியில் ஏலத்தில் விடப்பட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாயை தாண்டுகிறது. மேலும் அந்த காலகட்டத்தில் உள்ள ஒரு பாட்டில் பழைய ஸ்காட்ச் தற்போது ஏறக்குறைய இரண்டு மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |