இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது .
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கடந்த 18-ம் தேதி தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பிளேயிங் லெவேன் :
இந்திய அணி :
ஷிகார் தவான் (கேப்டன்), புவனேஷ்வரா் குமார் , பிருத்வி ஷா, இஷான் கிஷன், மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சஹார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால்.
இலங்கை அணி :
தசுன் ஷனாகா (கேப்டன்), தனஞ்செய டி சில்வா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, பானுகா ராஜபக்ஷ, சாரித் அசலங்கா, வஹிந்து ஹசரங்கா, கசுன் ரஜிதா, சாமிகா கருணாரத்ன, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சந்தகன்.