Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்க வைத்து பாதுகாக்க முடியல…. சீக்கிரம் சரி பண்ணுங்க…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

பள்ளி கட்டிடங்களை பராமரிக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் வட்டார கல்வி அதிகாரி அலுவலகம் இருக்கின்றது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் தான் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகிறது. இந்நிலையில் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அதனுள் இருக்கும் வட்டார கல்வி அதிகாரி அலுவலகமும் பழுதாகி கிடைக்கிறது.

இதனால் அங்கு ஆவணங்கள் எதுவும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக பெரிய அளவிலான பராமரிப்பு பணிகள் செய்யாமல் கட்டிடம் பழுதாகி கிடைக்கிறது. எனவே பழுதாகிக் கிடக்கும் பள்ளி கட்டிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |