எஸ்.ஆர்.என். என்ற அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஒன்றை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற முன்னாள் தலைவரும், பள்ளியின் பழைய மாணவருமான தொழிலதிபர் சபையர் ஞானசேகரன் தலைமை தாங்கி 30 இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.
மேலும் இதில் எஸ்.ஆர்.என். (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் பாண்டியன், எஸ்.ஆர்.என் (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நூர்ஜஹான், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணபிரான், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவி வாசுகி, பழைய மாணவர்கள் குலசேகரன், ஆனந்தராஜ், ராமச்சந்திரன், கணேசன், சங்கர் கணேஷ், சங்கர், மைக்கேல் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளை 1989-ஆம் ஆண்டு பிளஸ்-2 பயின்ற பழைய மாணவர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.