Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. 25 லட்சம் கோடிகள் இதில் மட்டும் கொள்ளை…. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது.

இந்நிலையில் 25 லட்சம் கோடிகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மட்டும் கொள்ளை. இதற்குப் பிறகும் பெட்ரோல் பங்குகளில் தனது புகைப்படத்தை விளம்பரம் செய்து கொண்டிருக்கும் திரு நரேந்திர மோடியின் தைரியத்தை பாராட்டுகிறேன் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |