மின்வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி, கிருஷ்ணன்கோவில், விருதுநகர், காரியாபட்டி, ஆத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் போன்ற 8 இடங்களில் மின்வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நடைபெற்றது. இதில் 200 நபர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.