Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் வேண்டும்…. கமல்ஹாசன் அறிக்கை….!!!

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகமும், தமிழ் வளர்ச்சிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கருணாநிதி. செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம்.தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும், தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கீடு தீவிரமாக பணியாற்ற வேண்டியது நம்முடைய வரலாற்று கடமை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |