போலீஸ் சூப்பிரண்டின் அலுவலகத்திற்கு முன் டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் குறிஞ்சி நகரில் ஷேக் முகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் கார் டிரைவராக இருக்கின்றார். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஷேக் முகம்மதுக்கும் அவரது மனைவி லட்சியமா பானுவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் லட்சியமா பானு தனது 2 மகன்களுடன் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஷேக் முகமது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் தனது மனைவி, மகன்களுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை வைத்த திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் ஷேக் முகமதுவை தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.