சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுதாக்கு பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாராயணபுரம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஆட்டோ ஒன்று நின்றுள்ளது.
இதனையடுத்து ஆட்டோவை சோதனை செய்த அதிகாரிகள் அரிசி சிதறி கிடந்ததை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் நடத்திய சோதனையில் சட்டடவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.