சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் தத்ரூபமாக வன விலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் குரங்கு அருவி அமைந்திருக்கிறது. இந்நிலையில் வால்பாறை எஸ்டேட் மற்றும் மலைப் பகுதியில் பெய்யும் மழையின் மூலம் இந்த அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கிறது. தற்போது இந்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த அருவிக்கு அருகில் தடுப்பு கம்பிகளை அமைத்து அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் வரையாடு மற்றும் மான் போன்ற வன விலங்குகளின் ஓவியங்களை சுவற்றில் தத்ரூபமாக வரைந்துள்ளனர்.