Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்சி பலகையை இப்படி பண்ணிட்டான்…. பெறப்பட்ட புகார்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கட்சியின் பெயர் பலகையை சேதப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சத்யா நகரில் தங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருத்தங்கல் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் அமைப்பாளராக இருக்கின்றார்.

இந்நிலையில் தங்கம் சிவகாசி-திருத்தங்கல் சாலையில் சத்யா நகருக்கு செல்லும் வழியில் கட்சியின் பெயர் பலகை ஒன்றை வைத்துள்ளார். அந்த பலகையை அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து தங்கம் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் ஈஸ்வரனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |