ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்குவது வழக்கம். இந்நிலையில் கொரோனா 2ஆம் அலை காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறுவதில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்கள் அதில் மனுக்களை செல்கின்றனர். இதனையடுத்து தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வாரத்தில் திங்கள்கிழமை நடைபெறும் இந்த கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் வழக்கத்தைவிட பொதுமக்கள் மனுக்களுடன் வந்துள்ளனர். குறிப்பாக மனு அளிக்க வந்த பலரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நீண்ட வரிசையில் நின்றுள்ளார். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனு அளிக்க வந்தவர்கள் அனைவருக்கும் சுகாதார துறையினர் சார்பில் கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.