Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேருந்தை இயக்கும் போது…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

பேருந்தை இயக்க முயற்சி செய்யும் போது டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் வசிக்கும் அசோக் குமார் என்ற டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சாப்பிடுவதற்காக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கொள்ளார் கிராமத்தின் சாலையோரம் இருக்கும் ஹோட்டல் அருகில் அசோக்குமார் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனை அடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் திருவண்ணாமலை நோக்கி பேருந்தை இயக்க அசோக்குமார் முயற்சி செய்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கையில் சாய்ந்து விட்டார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நடத்துனர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி ஆம்புலன்சில் விரைந்து சென்ற மருத்துவ உதவியாளர் அசோக்குமாரை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு மாற்று டிரைவர் மூலம் பயணிகள் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |