காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு பற்றி எப்போதும் பொய் தகவல்களை தொடர்ந்து பரப்பி வருவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் எப்பொழுதுமே பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் தோல்வியை சந்தித்தது. தேர்தலில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் பாஜக தலைவர்கள் மற்றும் கட்சியைப் பற்றி தொடர்ந்து குறை கூறி வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி தெரிவித்ததாவது: காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எல்லா இடங்களிலும் விழுந்து கொண்டு வருகின்றது. அடுத்தடுத்த தேடுதலில் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் மக்களிடம் எதிர்மறை எண்ணங்களையும், தங்கள் கட்சி குறித்து பொய்யான செய்திகளையும் தொடர்ந்து கூறி வருகின்றது என்று பல குற்றச்சாட்டுகளை முன் வைத்த மோடி இதுகுறித்து வேதனை தெரிவித்தார்.