ஜெர்மனியில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு கடுமையான சேதம் உண்டாக பொதுமக்கள் செய்த குழப்பம் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டையே புரட்டிப் போட்ட கனமழையால் தற்போது வரை 180 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 170-க்கும் அதிகமான மக்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாகவே வெள்ளம் தொடர்பில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாட்டு மக்களுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் சரியான நேரத்தில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெடரல் அலுவலகம் எச்சரிக்கை தகவல் அனுப்பியதை தலைவர், Armin Schuster உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது சுமார் 150 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இதனை பொதுமக்களும் உள்ளூர் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். எனினும் எந்த பகுதிகள் எல்லாம் கடுமையான சேதமடையும் என்பதை அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில் சிலர், தொலைத்தொடர்பு மொத்தமாக பாதிக்கப்பட்டுவிட்டது.
இதில் எச்சரிக்கை செயலிகள் மட்டும் இருந்து பயன் என்ன இருக்கிறது? என்று கேட்கிறார்கள். பெரும் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை ஏஞ்சலா மெர்கல் நேற்று பார்வையிட்டுள்ளார். Steinbach அணையின் அருகிலிருக்கும் 4500 குடும்பங்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் விரிசல் அதிகரித்திருப்பதால் எந்த நேரத்தில் ஆபத்து ஏற்படும் என்பது தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.