ஆவி பிடிக்கும் போது மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரப் பெருமாள் விளையில் சாம் பெனடிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அக்சயா ஜென்சி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதில் அக்சயா ஜென்சி ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி ஆவி பிடிப்பது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஆஸ்துமா நோய்க்காக அவரின் பெற்றோர்கள் அக்சயாவுக்கு ஆவி பிடிக்க செய்துள்ளனர்.
அப்போது திடீரென மாணவி மயங்கி விழுந்ததனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாணவி அக்சயாவை அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அக்சயா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.