வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் லவக்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லவக்குமார் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தனது மனைவியை அழைத்து வர வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய லவக்குமார் வீட்டின் பின் வாசல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 18 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை லவக்குமார் அறிந்தார். இதுபற்றி லவக்குமார் அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.