விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பார்த்திபன், கருணாகரன், மஞ்சிமா மோகன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதன்பின் இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் சேட்லைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த படம் சன் டிவியில் ரிலீஸாகும் என்றும் அதைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸிலும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.