மறைந்த பிரதமர் ஜவர்கலால் நேரு பெண் பித்து பிடித்தவர் என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பேசியதற்கு காங்கிரஸ் கட்சினர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டதோடு நேரு பற்றிய தவறான கருத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏவான சைனி முகநூலில் அண்மையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் நார்வே பிரதமர் மோடியை பார்ப்பது போன்ற காட்சியை மேற்கோள்காட்டி பாரதமாதாவை தான் மோடி பார்ப்பார் என்றும் அவர் நேரு அல்ல மோடி என்று பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ சைனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தனது பதிவை நியாயப் படுத்திப் பேசினார். ஜவர்கலால் நேரு பெண்பித்தர் அவர் பிரிட்டிஷார் உதவியுடன் நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிட்டால் அவரது குடும்பமே பிச்சையை விரும்பக்கூடிய குடும்பம் என்றும் பதிலளித்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இவரை கடுமையான விமசர்சனங்கள் மூலம் தாக்கினர். இதைத்தொடர்ந்து நேருவை பற்றி தவறாக பேசிவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள். நான் பேசியதை நானே வாபஸ் வாங்கி கொள்கிறேன். இனி இது போன்று நடக்காது என்று தெரிவித்துள்ளார்.