Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு 2 திருமணமா….? அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

சிறுமியை திருமணம் செய்து கொண்ட 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரிப்பபட்டிணம் பகுதியில்  வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் என்ற மகன் இருக்கின்றனர். இந்நிலையில் அஜித் ஈரோடு மாவட்டத்தில் உள்ள  பவானி பகுதியில் வசிக்கும் சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் பவானி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு ஏற்கனவே அவரின் பெற்றோர்கள் காமராஜ் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதன்பின் ஆடிப்பிறப்பை ஒட்டி கோவிலுக்கு சென்ற சிறுமியிடம் அஜித் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக 2 வாலிபர்களையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |