வாராந்திர கவாத்து பயிற்சி செய்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி அதிகாரிகள் காவல்துறையினருக்கு எடுத்துரைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை காவல்துறையினருக்கு வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த பயிற்சிகளை செய்வதால் ஏற்படும் நன்மைகள், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள், காவல்துறையினரின் எதிர்கால நலன் போன்றவற்றை பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.
அதன்பின் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அதிகாரிகள் முதல் காவல்துறையினர் வரை அவர்களுக்கு ஏற்படும் நிறை குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்துள்ளார். மேலும் புதுக்கோட்டை அறந்தாங்கி, பொன்னமராவதி, ஆலங்குடி, கீரனூர் மற்றும் கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் நடைபெற்றன.