6283 அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதின் ஒரு பகுதியாக 9 பேருக்கான காசோலையை தமிழக முதல்வர் வழங்கினார்
தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் போதெல்லாம் பிரதானமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம். எப்போது அரசு வழங்கும் என்று ஏங்கி , காத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வர் ஓய்வூதியம் வழங்கினார்.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 6283 அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதற்காக 1093 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . அடையாளமாக 9 பேருக்கு தமிழக முதல்வர் வழங்கினார். அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தும் போதெல்லாம் அவர்களின் கோரிக்கையில் ஒன்றாக இருந்து வந்த ஓய்வூதியம் தற்போது வழங்கப்படும் என்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.