நடிகை ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் உருவாக உள்ள திரைப்படம் ‘105 மினிட்ஸ்’.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. தற்போது இவர் தெலுங்கில் ஒரே ஷாட்டில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ‘105 மினிட்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் ராஜா துஷா இயக்கும் இந்த படத்தை Bommak Shiva தயாரிக்கிறார் .
Started a new project yesterday . #105
#oneshotmovie , really excited for this one . Wishing the team all the very best . #105minutes #hansika53rd pic.twitter.com/Wei2Ovrjuz— Hansika (@ihansika) July 20, 2021
இந்த படத்தில் ஹன்சிகா மட்டுமே நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஒரு வீட்டிற்குள் ஹன்சிகா தனிமையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அப்படியே அதே ரியல் டைமில் படமாக்கவுள்ளனர். இந்த படத்தின் கதையை கேட்டபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் தயாரிக்க ஒப்புக்கொண்டதாக Bommak Shiva தெரிவித்துள்ளார் .