ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டாவிற்கு இடம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள ஏ.மணக்குடி ஊராட்சிக்கு உட்பட நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு நிலம் தேர்வு செய்யப்பட்டு 200 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் அதற்கான இடம் அளந்து தராமலும், இணையத்தில் பதிவேற்றம் செய்யாமலும் இருக்கின்றது. இந்நிலையில் பொதுமக்கள் அதற்காக பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முன்னுக்கு பின் முரணாக கூறுகின்றனர் என புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பட்டா வழங்கிய இடத்தை தனியார் மற்றும் சிப்காட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பட்டா உள்ள பொதுமக்கள் ஏ.மணக்குடி திமுக கிளை செயலாளர் இளங்கோவன் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு படத்தில் வருவது போல இச்சம்பவம் நடந்துள்ளது.