Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் மிஷ்கினின் ‘பிசாசு 2’… விரைவில் பர்ஸ்ட் லுக்…!!!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2014-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிரிஷ்ணமுர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Mysskin wishes Andrea happy birthday by releasing her look in Pisasu 2 |  Tamil Movie News - Times of India

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் பிசாசு-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |