Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! மனநிம்மதி ஏற்படும்….! பாராட்டுகள் கிடைக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டாம்.

இன்று குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாளாக இருக்கும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். முன்னோர் சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகி செல்லும். வீண் செலவுகள் உண்டாகும். வீட்டை விட்டு வெளியே தங்கக்கூடிய சூழல் இருக்கும். உத்தியோக நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கிவிடும். காரிய வெற்றிக்கு இறைவழிபாடு அவசியம். மனதை ஒரு நிலைப்படுத்தி கொள்ள வேண்டும். எந்த பிரச்சினையையும் தெளிவாக அணுக வேண்டும். யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டாம். புத்திக்கூர்மையை அதிகப்படுத்த வேண்டும்.

பொறுமையுடன் எதிலும் ஈடுபட்டாலும் முன்னேற்றம் நிச்சயமாக இருக்கும். காதல் எல்லா வகையிலும் நன்மையை ஏற்படுத்தும். காதல் கைகூடி மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் எதிலும் ஈடுபடுவார்கள். மேற்கல்விக்கான முயற்சியில் முன்னேறி செல்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 6                                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் வெள்ளை

Categories

Tech |