மீனம் ராசி அன்பர்களே.! வெளியுலகத் தொடர்பு விரிவடையும்.
இன்று சுப செய்திகள் வந்து சேரும் நாளாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். சில காரியங்களை திட்டமிட்டு செய்ய வேண்டும். வங்கி சேமிப்பு உயர்த்தக்கூடிய எண்ணங்கள் இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். தனவரவு சேமிப்பாக மாற்ற வேண்டும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் அலுவலக பொறுப்புகளை நீங்கள் கவனமாக செய்ய வேண்டும். குடும்ப பொறுப்புகள் கூடிவிடும். குடும்பத்திற்கு என்ன வேணுமோ பார்த்து செய்து கொடுக்கக் கூடிய சூழல் இருக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அவ்வப்போது எழுகின்ற சந்தேக உணர்வை குறைத்து கொள்ள வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை சகோதர சகோதரிகள் உங்கள் மீது அன்பு கொள்வார்கள்.
உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். காதல் மகிழ்ச்சியை கொடுக்கும். காதலித்தவரையே கரம்பிடிக்கக் கூடிய சூழல் உருவாகும். எல்லாம் சிறப்பாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். மேர்கல்விக்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத்துறை உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க்