Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய கார் … இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ..!!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதற்கு முன்பு போலோ மற்றும் வென்டோ கார்களின் ஜிடி லைன் வேரியண்ட் அறிமுகம் செய்திருந்தது. தற்போது அந்நிறுவனம் அமியோ ஜிடி லைன்  அறிமுகம் என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் காரின் விலை ரூ. 9.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த அமியோ காரில் 110 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் ற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

Image result for ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்

இந்த அமியோ ஜிடி லைன் மாடல் சன்செட் ரெட் எனும் புதிய நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட போலோ மற்றும் வென்டோ கார்களில் புதிய கிரில் மற்றும் பம்ப்பர் வழங்கப்பட்டிருந்த நிலையில், அமியோ ஜிடி லைன் மாடலில் இவை ஏதும்  வழங்கப்படவில்லை.

Image result for ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்

மேலும், அமியோ ஜிடி லைன் மாடல் ஹைலைன் பிளஸ் டாப்-எண்ட் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காரில் ஃபோக்ஸ்வேகன் கனெக்ட் சூட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமியோ டீசல் மாடல் 5 வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. மேலும்,  பெட்ரோல் வேரியண்ட்களுக்கு நான்கு வருடங்கள் / ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டியும் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |