ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் நம்முடைய புகைப்படம், பெயர், முகவரி போன்றவை அடங்கியிருக்கும்.
இந்த ஆதார் கார்டில் ஒரு விஷயம் என்னவென்றால், அதில் உள்ள புகைப்படம்கருப்பாக தெளிவாக இல்லாமல் இருக்கும். இதனால் இதில் நான் அழகாகவே இல்லை என்று ஒரு சிலர் கூறுவார்கள். அப்படி இருக்கும் புகைப்படத்தை எப்படி மாற்றலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். இதற்கு ஆன்லைன் முறை கிடையாது. பாதுகாப்பு கருதி ஆப்லைன் முறையை தான் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
முதலில் ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பக்கமான uidai.gov.in க்கு செல்ல வேண்டும்.
பின்னர் https://uidai.gov.in/images/UpdateRequestFormV2.pdf என்ற லிங்கில் திருத்தம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதையயடுத்து இந்த படிவத்தை ( Form) பூர்த்தி செய்து பக்கத்திலுள்ள ஆதார் சேர்க்கை மையத்திற்கு சென்று இந்த போரம் ஆதார் அட்டையுடன் தொடர்புடைய அதிகாரிக்கு கொடுக்க வேண்டும்
இவ்வாறு புகைப்படம் மட்டுமல்ல, அதே செயல்முறை மூலம் ஆதார் அட்டையில் உங்கள் பெயர், முகவரி அல்லது பிற விவரங்களையும் புதுப்பிக்கலாம்
ஆதார் மையத்திற்கு விண்ணப்பத்தை கொண்டுசெல்லும் போது, ஐரிஸ் ஸ்கேன் மற்றும் முக புகைப்படம் போன்ற உங்கள் பயோமெட்ரிக் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும். இவ்வாரு ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை புதுப்பிக்கலாம்.