நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து முதலீடு செய்ய நினைத்தால் அதை PPF திட்டத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்தியாவில் அதிக வட்டி வருமான வழங்கும் திட்டங்களில் PPF ம் ஒன்று. முதலில் இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் அதிகமான வட்டி. இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால் 100% பாதுகாப்பான முதலீடு. 15 -20 வருடங்கள் வரை நீண்ட காலம் இப்படி ஒவ்வொரு மாதமும் சிறுக சிறுக முதலீடு செய்தால் மெச்சூரிட்டி காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் மாதம் 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். சிறிய தொகையில் நீண்டகால முதலீடு செய்ய விரும்புவோருக்கு சிறந்தது. வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் எளிமையாக PPF கணக்கு தொடங்கிவிடலாம். இத்திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 15 வருடங்கள். கூடுதலாக 5 வருடங்கள் வரை நீட்டித்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரி விதிக்கப்படாது. அதேபோல, வட்டி வருமானத்துக்கும் வரி விதிக்கப்படாது.
இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு கடைசியில் ரூ.31.95 லட்சம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக உங்களுக்கு இப்போது 25 வயது என்றால் மாதம் ரூ.30,000 அல்லது ரூ.35,000 சம்பளம் வாங்கினால் நீங்கள் தினமும் 200 ரூபாய் வீதம் மாதத்துக்கு ரூ.6000 வரையில் இந்த திட்டத்தில் மிகவும் சுலபமாக முதலீடு செய்யலாம். இது சிஉங்களுக்கு றிய தொகையாகத் தெரிந்தாலும் 20 வருடங்கள் கழித்து உங்களு க்கு கிட்டத்தட்ட 32 லட்சம் கிடைக்கும்.