ஷாப்பிங் விரும்பிகளுக்கு புதிய கிரெடிட் கார்டு ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
எஸ்பிஐ வங்கி நாட்டின் மிகப்பெரிய வங்கி. நாடு முழுவதும் 44 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதில் உள்ளன. கொரோனா நெருக்கடி காலத்தில் எஸ்பிஐ வங்கி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி புதிய கிரெடிட் கார்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் Fabindia என்ற நிறுவனத்துடன் கை கோர்த்து இந்த கிரெடிட் கார்டுக்கு Fabindia SBI Card என பெயரிடப்பட்டுள்ளது.
ஷாப்பிங் விரும்பிகளின் சௌகரியத்திற்காக இந்த கிரடிட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் சலுகையையும் பயன்களையும் அள்ளி வழங்குகின்றது. நாடு முழுவதும் Fabindia மற்றும் ஆன்லைனில் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பெற விண்ணப்பிக்கலாம். இரண்டு வகையான கார்டுகள் வழங்கப்படுகின்றது. முதல் கார்டுக்கு ஆண்டு கட்டணம் 499 ரூபாய். இரண்டாம் கார்டுக்கு ஆண்டு கட்டணம் 1499 ரூபாய் ஆகும்.