Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த படைப்பு … பட்ஜெட் விலையில் அறிமுகம் ..!!

சாம்சங் நிறுவனம்  இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்10எஸ்  ஸ்மார்ட் போனை  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எம்10எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட் போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 பி ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.

Image result for கேலக்ஸி எம்10எஸ்

மேலும், இந்த ஸ்மார்ட் போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது அல்ட்ரா வைடு சென்சார், 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Image result for கேலக்ஸி எம்10எஸ்

மேலும், சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் ஸ்டோன் புளு மற்றும் பியானோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ. 8999 என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா வலைத்தளங்களில் துவங்க உள்ளது.

Categories

Tech |