Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு” உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!

அயோத்தி வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய ஒரு வழக்கு அயோத்தியா வழக்கு. மாதக்கணக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இதில் ஒவ்வொரு பிரிவினரும் அதாவது இஸ்லாமிய தரப்பினர் , மத்திய அரசு , இந்து அமைப்பினர் மற்றும் இருக்கக்கூடிய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் 15 நாட்கள் , 20 நாட்கள்  என வாதங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

அந்த சூழ்நிலையில் அக்டோபர் மாதத்திற்குள் இந்த வழக்கின் அனைத்து விசாரணையையும்,  வாதங்களையும் நிறைவு செய்ய உச்சநீதிமன்றம் திட்டமிட்டு இருந்தது.ஏனென்றால் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறுகிறார்.தீர்ப்பு எழுத ஒரு வார காலமாவது ஆகும் , மற்ற வழக்குகளையும் விசாரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

எனவே அதனை கருத்தில் கொண்டுதான் அக்டோபர் 18_ஆம் தேதிக்குள் அனைத்து விசாரணையையும் முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் தீடிர் திருப்பமாக அயோத்தி வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியின் உடல்நலக்குறைவு காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |