தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, கோயம்பேடு மார்கெட், கிண்டி, வில்லிவாக்கம், அடையாறு, ஐடி பார்க், பெரும்பாக்கம், கே.கே.நகர் பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசா நகர், பி.ஹெச்.ரோடு, அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், கனகசபை காலனி, பெருமாள் கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். கிண்டியில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய காலணி, பெரியார் நகர், மூவரசம்பேட்டை மெயின்ரோடு, எம்.ஜி.ஆர்.ரோடு, ஏ.ஜி.எஸ் காலனி, வோல்டாஸ் காலனி, லட்சுமி நகர் 4வது ஸ்டேஜ், ஹிந்து காலணியில் ஒரு பகுதி, கே.கே.நகரை ஒட்டியுள்ள ராமாபுரம், கெருகம்பாக்கம், மனப்பாக்கம், ஐபிஎஸ் காலனி, ஆபிசர்ஸ் காலனி, திருவள்ளுவர் தெரு.
வில்லிவாக்கம் பகுதியில், சிட்கோ 1 முதல் 10வது ப்ளாக் வரை, நேரு நகர், அம்மன்குட்டை, பலராமபுரம், ராமகிருஷ்ணாபுரம், திருநகர்,, வேணுகோபால் தெரு, சிவன் கோயில், வடக்கு ஹைக்கோர்ட் காலனி, ரெட்டி தெரு, ரெட் ஹில்ஸ் ஏரியா, அடையாறு பகுதியில் விஜிபி செல்வம் நகர் முதல் மெயின் ரோடு, 2வது மெயின்ரோடு பார்க் அவென், தண்டீஸ்வரம் 7வது மெயின் ரோடு, ராஜு நகர், மேட்டுக்குப்பம், பிடிசி குவாட்டர்ஸ், சக்தி கார்டன், பிள்ளையார் கோயில் தெரு, நேருநகர், ராஜேவ் காந்தி சாலை, கண்ணகி நகர்,, துரைப்பாக்கம், ஐஏஎஸ் காலணி, காளியம்மன் கோயில் தெரு
சிட்டலப்பாக்கம், வரதராஜ பெருமாள் கோயில், எடிபி அவென்யூ, எம்.ஜி.ஆர். நகர், நூக்கம்பாளையம் ரோடு, வள்ளுவர் நகர், அரசங்கலனி மெயின்ரோடு, நாகலட்சுமி நகர், ஊட்டியம்பாக்கம், பெரும்பாக்கம், அழகிரிசாமி சாலை, வேம்புலியம்மன் கோயில் தெரு, மூகாம்பிகை தெரு,ஜெய் பாலாஜி நகர், சூளைமேடு நெடுஞ்சாலை, கன்னியம்மன் கோயில், ரங்கராஜபுரம், நெல்சன் மாணிக்கம் ரோடு, அம்பேத்கர் சாலை, தாங்கல் தெரு, ஆர்.கே.சாலை, பார்க் அப்பார்ட்மென்ட் ஆகிய பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது.
அதேபோல திருவண்ணாமலை-மணலூர்பேட்டை சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. எனவே, அந்தச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருக்கும் தாமரை நகர் மின் பிரிவுக்கு உள்பட்ட உயர் மற்றும் தாழ்வழுத்த மின்பாதையை மாற்றி அமைக்கும் பணி ஜூலை , 22, 26, 28, 30 ஆகிய நாள்களில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மணலூர்பேட்டை சாலை, மாரியம்மன் கோவில் தெரு, திருநகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டி மற்றும் ரங்கநாதபுரம் துணை மின் நிலையங்கள் இருந்து மின்சாரம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், மாராடி, வைரிசெட்டிபாளையம், B. மேட்டூர், S. N. புதூர், K. N. புதூர், சோபனபுரம், து. ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி வேங்கடத்தானூர் பெருமாள்பாளையம், T. முருங்கப்பட்டி, T. மங்கப்பட்டி, T. பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காலை 9. 45மணி முதல் மாலை 5. 00 மணிவரை மின்சாரம் இருக்காது.