கன்னியாகுமரி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கிராமத்தில் வசிப்பவர் ஜெகன். பூசாரியாக இவர் அந்த பகுதியில் அய்யாவழி கோவில் ஒன்றை தர்மபதி என்ற பெயரில் நடத்தி வருகிறார். இதில் பலரும் குறி கேட்க வருகின்றனர். இந்நிலையில் இந்த பூசாரி, அவரிடம் குறி கேட்க வரும் இளம்பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திங்கல்நகர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாதர் சங்கத்தின் தலைவி கூறுகையில், இந்த சம்பவம் குமரி மாவட்டத்தை உலுக்கக்கூடிய கூடிய ஒரு சம்பவமாக இருக்கிறது. இதுவரை எத்தனை பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குறித்து தெரியவில்லை. பல பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். விரைவில் மாதர் சங்கம் அவர்களுக்கு கவுன்சில் கொடுத்து எத்தனை பேர் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த விவரத்தை பகிரங்கப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.