Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தபடியே உங்க ATM-கார்டில்…. PIN நம்பர் மாற்ற…. இதை செய்தால் போதும்…!!!

 நாடு முழுவதும் பெருந்தொற்றான கொரோன பரவலை அடுத்து சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு பெரும்பாலானவர்கள் வங்கிக் கிளைகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். முடிந்தவரையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை செய்து வருகின்றனர். அதேபோன்று எஸ்பிஐ வங்கியும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனிலேயே பணப்பரிவர்த்தனை செய்யுமாறு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் ATM-ல் PIN நம்பரை மாற்றுவது.

எப்படி மாற்றுவது?

முதலில் எஸ்எம்எஸ் பாக்ஸை ஓப்பன் செய்து 567676 என்ற எண்ணுக்கு PIN ABCD EFGH என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

இதில் ABCD என்பது உங்களுடைய ஏடிஎம் கார்டில் உள்ள கடைசி நான்கு இலக்க எண்கள். EFGH என்பது உங்களது அக்கவுண்ட் நம்பரில் உள்ள கடைசி நான்கு இலக்க எண்கள் ஆகும்.

எஸ்எம்எஸ் அனுப்பியவுடன் உங்களது பதிவு செய்யப்பட்ட  செல்போன் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும்.

இந்த ஓடிபி நம்பர் வந்த 24 மணி நேரங்களுக்கு ஆக்டிவாக இருக்கும். அதன் பின்னர் அருகிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்திற்கு சென்று அதில் PIN மாற்றும் வசதியைத் தேர்ந்தெடுத்து OTP  எண்ணைப் பதிவிட்டால் புதிய PIN நம்பர் மாறிவிடும்.

IVR அழைப்பு மூலமாகவும் நீங்கள் PIN நம்பரை மாற்றலாம். உங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் என்னிலிருந்து 18004253800 அல்லது 1800112211 என்ற எண்களுக்கு போன் செய்து உங்களது 16 இலக்க ஏடிஎம் கார்டு நம்பரைப் பதிவிட வேண்டும்.

இதையடுத்து உடனடியாக உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டால் உங்களால் PIN நம்பரை மாற்ற முடியும்.

Categories

Tech |