தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மேலும் முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய்க்கு என அரசு சார்பில் தனியாக டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.