Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தெளிவான ஸ்கெட்ச்….. முதலாளிக்கு துரோகம்… ரூ1,50,000 வழிப்பறி…. உல்லாசத்திற்கு பிறகு சிறைவாசம்…!!

வேலூர் அரிசி மண்டி கடை உரிமையாளரிடம் இருந்து 1 1/2 லட்சம் வழிப்பறி செய்த கும்பலை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூரில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வரும் கடையூரை சேர்ந்த கோதண்டராமன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த 4ம் தேதி இரவு வேலப்பாடி அருகே சுந்தரராயர் தெருவில் நடந்து சென்று இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் கோதண்டராமன் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை  அதிகாரிகள் வழிப்பறி செய்யப்பட்ட தெருவில் உள்ள திருமண மண்டபத்தின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

Image result for வழிப்பறி

அதில் வழிப்பறி சம்பவம் பதிவாகி இருந்தது. கோதண்டராமன் இன் கடையில் வேலை பார்க்கும் சேகர் என்ற இளைஞர் தான் வழிப்பறிக்கு யோசனை கொடுத்தது என்பதை காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்தனர். பின் தனிப்படை காவல்துறை அதிகாரிகள் அந்த கும்பலை தேடி வந்த நிலையில், வாடகை காரில் ராமேஸ்வரம் சென்று அந்த கும்பல் வேலூரில் உள்ள தங்கள் நண்பர்களையும் அழைத்துள்ளனர். இதுதொடர்பான தகவல் காவல்துறைக்கு கிடைக்கவே இதற்கிடையே பணம் முழுவதையும் செலவழித்து விட்டு ஊர் திரும்பிய கும்பலை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

Categories

Tech |