தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவண்ணாமலை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 23ஆம் தேதி காலை 10.38 மணி முதல் 24ஆம் தேதி காலை 8.51 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.