உலக நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்களின் ஸ்மார்ட்போன் தகவல்களை இஸ்ரேல் நாட்டின் NSO குழுமத்தின் பெகாசஸ் சாப்ட்வேர் திருடுவதாக புகார் எழும்பியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் NSO நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் PEGASUS MALWARE SOFTWARE அனைவரது மைக்ரோபோனில் உள்ள தகவல்களை திருடுகிறது என்ற கருத்து வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள தி வாஷிங்டன் போஸ்ட், UKவின் தி கார்டியன், இந்தியாவின் தி ஒயர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின் படி பிரிட்டிஷ் தூதரக அதிகாரி, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு கழகத்தின் 2 அதிகாரிகள், ஜியோ காண பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்கள் ஆகியோரின் ஸ்மார்ட்போன் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் பின் ஐக்கிய அரபு அமீரகத்தின் போராட்டக் குழுவிற்கு தேவையான செய்திகளையும் இந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்ப்பதாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்த மால்வேர் சாஃப்ட்வேரினால் பல்வேறு பிரச்சினைகள் எழும்புகின்றன. இதனை தொடர்ந்து சுமார் 50 ஆயிரம் பேரின் ஸ்மார்ட்போனின் தகவல்களை திருடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் மெக்சிகோவில் மட்டும் 15,000 ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
இதில் அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினர், பத்திரிக்கையாளர், அரசின் விமர்சகர்கள் போன்றோரின் தகவல்கள் அடங்கும். இதனை தொடர்ந்து இந்தியாவிலும் இரு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் என 2000க்கும் மேற்பட்டவர்களின் வாட்ஸ்ஆப் தகவல்கள் இந்த பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமானது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை இந்த மென்பொருள் செயலி மூலம் உளவு பார்த்ததாக புகார் எழும்பியதை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்த செயலி மூலம் யாரையும் உளவு பார்க்கவில்லை என மத்திய தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மேலும் எந்தவொரு ஆதாரமின்றி மத்திய அரசு மீது இந்த குற்றம் சுமத்துவது உண்மைக்குப் புறம்பானது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக என்.எஸ்.ஓ குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து வாஷிங்டன் போஸ்ட் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.