Categories
உலக செய்திகள்

இவர் தான் ரியல் ஹீரோ…. விண்வெளியில் சாதனை படைத்த வீரர்…. பிறந்தநாள் கொண்டாடிய நாசா…!!

விண்வெளி பயணத்தில் சாதனை படைத்த ஜான் க்ளேனின் 100வது பிறந்தநாளை நாசா வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளது.

அமெரிக்கா நாட்டின் ஓஹியோ பகுதியில் கேம்பிரிட்ஜ் என்ற இடத்தில் ஜூலை 18,  1921 இல் பிறந்தவர் ஜான் க்ளேன். இவரது பெற்றோர் ஜான், கிளாரா மற்றும் சகோதரி ஜூன் ஆகியோருடன் நியூ கார்ட்டில் வசித்துள்ளார். இவர் அமெரிக்காவில் தொழிலதிபர் அரசியல்வாதி, விண்வெளி வீரர், பொறியாளர், மரைன் கர்ப்பஸ் ஏவியேட்டர் போன்ற பல்வேறு துறைகளில் பிரபலமாக வலம் வந்தார். இவர் அமெரிக்காவில் 1957ஆம் ஆண்டு முதல் சூப்பர்சோனிக் டிரான்ஸ்பர் விமானத்தை இயக்கினார்.இதனை அடுத்து 1959 ல் மெர்குரி-7 விண்வெளி பயணத்தில் ராணுவ சோதனை விமானியாக நாசாவால் தேர்ந்துடுக்கப்பட்டார். இதன் பின்பு 1962இல் மெர்குரி பயணத்தை மேற்கொண்டு பூமியின் சுற்றுப்பாதையில் 3 முறை சுற்றினார். இதனால் பூமியை சுற்றிய  முதல் அமெரிக்கர்  என்ற பெருமையையும் விண்வெளிக்குச் சென்ற ஐந்தாவது அமெரிக்க நபர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார். இதனை அடுத்து 1962ல் நாசாவிடம் இருந்து சேவை பதக்கத்தையும், 1978ல் காங்கிரஸிடமிருந்து விண்வெளி பதக்கத்தையும், 1990ல் விண்வெளி வீரர் ஹால் ஆஃப் ஃபேமில் இடமும் பெற்றுள்ளார்.

இவர் 1964இல் நாசாவில் இருந்து விலகியதை தொடர்ந்து 1974 முதல் 1999 வரை சுமார் 24 ஆண்டுகளாக ஐக்கிய அமெரிக்க செனட்டராக பணிபுரிந்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்காவில் 1998இல் டிஸ்கவரி எஸ்.டி.எஸ்- 95ல் பயணித்துள்ளார். அதன் காரணமாக விண்வெளியில் பறக்கும் மிகவும் பழமையான நபர் மற்றும் மெர்குரி -7னிலும் பரந்த நபர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். மேலும் 2012 ல் ஜனாதிபதி பதக்க சுதந்திரத்தையும் பெற்றவர். இதனையடுத்து 2016இல் தனது 95வது வயதில் ஜான் க்ளேன் உயிரிழந்துள்ளார். இப்படி விண்வெளி பயணத்தில் வரலாற்றை பதித்த இவரின் 100வது பிறந்தநாள் நாசாவால் வெகு விமர்சையாக கொண்டப்பட்டுள்ளது. அதில் கலந்துகொண்டு பேசிய லெஜெண்ட் கேத்ரின் ஜான்சன் கூறியதில் “ஜான் வாழ்க்கையில் அவரின் தைரியம், மக்களுக்காக அவர் செய்த சேவை மற்றும் அவரின் விண்வெளி பயணம் ஆகியவற்றை மக்கள் என்றும் மனதில் வைத்திருப்பர் மேலும் ஒரு நல்ல மனிதர் பூமியிலிருந்து வெளியேறிவிட்டார்” என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்” நாசாவில் எஸ்.டி.எஸ்-95ல் பேலோட் நிபுணராகவும் , விண்வெளி பயணத்தில் ஏஜிங் செயல்முறைகளிலும் அவர் பங்காற்றி உள்ளார்”என குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |