நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி, கல்லூரிகள் மட்டும் இன்னும் ஒரு சில மாநிலங்களில் திறக்கவில்லை.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர், ரன்தீப் குலேரியா, கொரோனா தொற்று விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கலாம். ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கலாம். இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் விருப்பத்தை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியில் கல்வி முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.