Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தீபக் சாகரின் அதிரடி ஆட்டம் …. இலங்கையை வீழ்த்தி …. தொடரை வென்ற இந்தியா ….!!!

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி  வெற்றி பெற்றது .

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த  இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாகஅவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும், அசலங்கா 65 ரன்களும் ,கருணாரத்னே 44 ரன்களும் எடுத்தனர்.இந்தியா தரப்பில் சஹல் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.

தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 13 ரன்களிலும், அடுத்து வந்த  இஷான் கிஷன்ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேப்டன் ஷிகர் தவான் 29 ரன்கள்  எடுத்து ஆட்டமிழந்தார் . இதனால் இந்திய அணி 12 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து மனிஷ் பாண்டே – சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்களை குவித்ததது . இதில் மனிஷ் பாண்டே 37  ஆட்டமிழக்க ,சூர்யகுமார் யாதவ் 53 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் பிறகு களமிறங்கிய  ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆக , குருணால் பாண்டியா 35 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனால் 193 ரன்களளுக்குள் இந்திய அணி  7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு களமிறங்கிய தீபக் சாகர் – புவனேஸ்வர் குமார் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் அதிரடி காட்டிய தீபக் சாகர் 69 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்றது. இதனால் இறுதியாக 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி  277 ரன்களை குவித்து திரில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Categories

Tech |